உலக மக்களை கண்ணீர் சிந்தவைத்த 2 வயது குழந்தை ஹோப்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?


நைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஹோப் சாத்தானின் சந்ததி எனக் கூறி பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குற்றுயிராய் டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்தவரும், தற்போது ஆப்ரிக்காவில் வசித்து வரும் Anja Ringgren Loven என்பவரது மீட்புக் குழு அங்கு சென்றுள்ளது. அப்போது பரிதாப நிலையில் இருந்த குழந்தை ஹோப்பைக் கண்ட Loven கையில் சாப்பிடுவதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்து விட்டு, அதன் பின்னர் தன்னிடம் இருந்த தண்ணீரை அந்த குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.

குழந்தை ஹோப் மீது பரிதாபம் கொண்ட அவர், சிறுவனின் அந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை அங்கிருந்த மக்களிடம் இருந்து கேட்டரிந்தார். இதில் மனமுடைந்த லாவன் சிறுவனை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க வகை செய்தார். அதில் ஹோப்பிற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரத்த சிவப்பணுக்கள் ஏற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து தினசரி இரத்தம் மாற்றுதல் என பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் Loven தன்னுடைய சமூகவலைத்தில் பதிவேற்றம் செய்தார். அதில் 30 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு தானும் தன் மீட்பு படையினரும் சென்ற போது அங்கு இருந்த சிறுவனின் நிலை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹோப்பை சமூகவலைத்தளங்களில் கண்ட அனைவரும் மிகவும் அனுதாபப்பட்டனர். அதைத் தொடர்ந்து இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனால் ஹோப்பிற்கு உதவுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கு பணம் அனுப்பப்பட்டன. இந்த வகையில் ஒரு மில்லியன் டோலருக்கும் அதிகமான நிதி சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு பின்னர் ஹோப் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்ட உடன் Loven குழந்தைகளின் தொண்டு நிறுவனமான African Children's Aid Education and Development Foundation ல் சேர்த்து விட்டார்.

தற்போது ஹோப் நல்ல உடல் தகுதி பெற்று பள்ளிக்கு சென்று விட்டான் என்று கூறி புகைப்படத்தை Loven சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அன்று சாத்தானின் சந்ததி என பெற்றோரால் கைவிடப்பட்ட ஹோப் இன்று உலக மக்கள் உதவியுடன் நல்ல நிலையில் இருப்பது இதற்கு முக்கிய காரணம் Loven என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv