5 வயதில் தாயான சிறுமி! 69 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்...


பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என கூறினால் அது மிகையாகாது.

உலகளவில் பல்வேறு காலகட்டத்தில் சிலருக்கு பிரசவம் வினோதமான முறையாக அமைந்து விடுகிறது.

அப்படி நடந்த சில உண்மை சம்பவங்களை காண்போம்.

பூமியிலேயே இளம் அம்மா Lina Medina என்பவர் தான். காரணம் இவர் தனது 5 வயதிலேயே குழந்தையை பெற்றார்.

3 வயதிலேயே அவர் பூப்படைந்து விட்டார், பின்னர் அவர் தந்தையே அவரை சீரழித்ததின் காரணமாக கர்ப்பமடைந்த அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் 70 வயதில் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி 40 வருடம் கழித்தே குழந்தை பிறந்தது.

உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றுள்ள சாதனைக்கும் ஒரு பெண் சொந்தகாரராக உள்ளார். இவர் 27 பிரசவம் மூலம் மொத்தம் 69 குழந்தைகளை பெற்றுள்ளார்.

Thomas Beatie என்பவர் பிறக்கும் போது பெண்ணாக தான் பிறந்தார். பின்னர் உடலில் ஏற்ப்பட்ட மாற்றத்தின் காரணமாக அவர் ஆணாக மாறினார்.

அவர் மனைவி கருத்தரிக்க முடியாததால் அவரே மருத்துவ உதவியுடன் கருத்தரித்து குழந்தையை பெற்றுடுத்த முதல் ஆண் என்ற பெயருக்கு சொந்தகாரராக ஆனார்.

Nadya Suleman என்னும் பெண் கடந்த 2009ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். இவற்றில் 6 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் அடங்கும்.

Tacey Herald என்னும் 2 1/2 அடிகளே கொண்ட குள்ள பெண் மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மூன்று தடவை குழந்தையை பெற்றெடுத்தார்.

Omkari Panwar என்னும் பெண்மணி தனது 70வது வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருக்கு ஏற்கனவே 2 மகள்களும், 5 பேர குழந்தைகளும் உள்ளனர்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv