சவூதியிலிருந்து 39000 பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!


சவூதி அரேபியாவில் கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் குடியிருப்பு மற்றும் வேலை விதிமுறைகளை மீறியதற்காக சுமார் 39,000 பாகிஸ்தானியர்களை, அந்நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் குடியேறி வசித்து வரும் பாகிஸ்தானியர்களில் சிலர், அவர்களது விசா முடிந்த நிலையிலும் தங்கியிருந்ததோடு, குறிப்பிட்ட சிலர் ஐ.எஸ்  தீவிரவாதிகளுக்கு சார்பாக செயற்படுவதாக வந்த தகவல்களை தொடர்ந்து, சவூதி அரசானது முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமீறல்களில் ஈடுபட்டவர்களை நாடுகடட்த்தியுள்ளதாக அந்நாட்டு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 82 பாகிஸ்தானியர்கள் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,  ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த பாகிஸ்தானியர்களில் சிலர் போலி விசாவுடன் சவூதி அரேபியாவில் நுழைந்துள்ளதாக, புலனாய்வு பிரிவு தெரிவித்ததை தொடர்ந்து அந்நாட்டு மக்களிடேயே பதற்ற நிலை உருவாகியது..

குறித்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் விசா விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக போதை  மருந்து கடத்தல், திருட்டு, மோசடி மற்றும் தாக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக  இனங்காணப்பட்ட 39000 பேரை சவூதி அரசானது கடந்த 4 மாதங்களில் நாடு கடத்தியதாக அறிவித்துள்ளது.

மேலும் சவூதிக்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு பாகிஸ்தான் நாட்டவரையும், தீவிர சோதனைக்குப் பிறகு பணிக்கு  அமர்த்தும்படி கட்டளையிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரச தகவல் மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv