தாய்வானில் கோரவிபத்து: சம்பவ இடத்தில் உடல்கருகி 32 பேர் மரணம்


தாய்வானில் சுற்றுலா பேருந்து மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்வான் தலைநகர் தைபே அருகே ஒரு சுற்றுலா பேருந்தொன்று 44 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தது.

அதிவேகமாக பயணித்த பேருந்து குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதியுள்ளது.

இவ்வாறு தடுப்பில் வேகமாக மோதியதன் காரணமாக பேருந்து தீப்பிடித்தது எரிந்தது, குறித்த விபத்தில் 30 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர்.

இந்த விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 முதல் 60 வயது உடையவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தாய்வானை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது 12 பேர் தைபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv