உலகிலேயே குண்டான பெண் இவர் தான்! 25 வருடங்களாக படுக்கையில்...


உலகிலேயே குண்டான பெண் எகிப்து நாட்டிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்.

எகிப்து நாட்டில் உள்ள Alexandria நகரை சேர்ந்தவர் Eman Ahmed (36) இவர் 500 கிலோ எடையுடன் உலகிலேயே குண்டான பெண் என்னும் பெயருக்கு சொந்தகாரராக உள்ளார்.

இவர் கடந்த 25 வருடங்களாக வீட்டை விட்டு போகாமல் படுக்கையில் தான் இருக்கிறார்.

அவர் உடல் எடையை பற்றி அறிந்த இந்தியாவின் மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் உடல் எடையை ஆப்ரேஷன் மூலம் குறைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து Emanக்காக பிரத்யோகமாக செய்யப்பட்ட படுக்கையில் அவர் ஏற்றப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு வரும் விமானத்தில் கஷ்டப்பட்டு ஏற்றப்பட்டார்.

அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், அதிர்வு கருவி மற்றும் முக்கிய சாதனங்கள் விமானத்தில் அவருக்காக வைக்கப்பட்டிருந்தன.

அவருக்கு நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு ஏற்ப்பட வாய்ப்பிருந்ததால் அவர் பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

இன்று மும்பை வந்து சேர்ந்த அவருக்கு மருத்துவமனியில் சிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அவருக்கு சிகிச்சை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv