பிரான்சில் தமிழரின் வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரை....


பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது தமிழர் ஒருவருடைய வர்த்தக நிலையம் முற்றாக சேதமாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிகிக்கின்றன.

பாரிஸின் புறநகர் பகுதியில் சனிக்கிழமை (11) கலகக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, இப்பகுதியில் அமைந்திருந்த தமிழர் ஒருவருடைய வர்த்தக நிலையம் முற்றாக சேதமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்மூலம் இரண்டு இலட்சம் யூரோவுக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தமிழ் வர்த்தகர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


இதில் பொலிஸ் விசாரணைகளின் போது இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார் என்ற காரணத்திற்காக இளைஞர்கள் அனைவரும் ஒல்னே சுபுவா பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த வன்முறைச் சம்பவங்களில் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரியூட்டப்பட்டதோடு பொதுச்சொத்துக்கள் பலவும் சேதமாக்கப்பட்டிருந்தன.
இதன்போதே தமிழர் ஒருவருடைய வர்த்தக நிலையமும் முற்றாக சேதமாகியுள்ளது.

மேலும், இளைஞர்கள் முன்னெடுத்திருந்த வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடைய 37 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரம் மூண்ட ஒல்னே சுபுவா பகுதியானது வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் ஒன்றாகவும், வேலையில்லாத் திண்டாடம் உள்ள பகுதியாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv