பிரித்தானியாவில் 100 பேர் மோதிக்கொண்டு கொடூர தாக்குதல்:


பிரித்தானியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி முன் 100ற்கும் மேற்பட்ட நபர்கள் மோதிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸ், கார்டிப்பில் உள்ள டைகர் டைகர் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு முன்னரே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடியோவில், கேளிக்கை விடுதிக்கு முன் 100ற்கும் மேற்பட்ட நபர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொள்கின்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, தகவலறிந்த சம்பவயிடத்திற்கு 8 முதல் 10 பொலிஸ் வாகனங்கள் விரைந்தது.

குறித்த சாலை சந்தை போல் காட்சியளித்தது, காயமடைந்த நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv