மனைவியிடம் சவால் விட்டு பிரசவ வலியை உணர்ந்த கணவன்: கண்ணீரில் முடிந்த நிகழ்வு!


டாம் மிட்சல்சன் என்பவர் தன் மனைவி ஜென்னியிடம் எப்போதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் மோசமாக திட்டும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் ஜென்னி தனது மகனிடம் பிரசவத்தினால் ஏற்படும் வலிகளை பற்றி கூறிக்கொண்டு இருக்கும் போது, அதன் முடிவில் ஏற்பட்ட பிரச்சனையின் போது தான் டாம் தனது மனைவியிடம் செயற்கையாக பிரசவ வலியை உணர நான் தயார் என்று சவால் விடுத்தார்.

எனவே இதற்காக ஒரு மருத்துவமனையை தேர்வு செய்து, அங்கு டாமுவுக்கு சிமுலேஷன் என்ற மெஷினை பொருத்தினார்கள்.


இந்த மெஷின் மூலம் டாமுக்கு, ஒரு பெண் எப்படி மூன்று நிலை பிரசவ வலியை உணர்கின்றாலோ அதேபோல் படிப்படியாக பிரசவவலியை டாமுவிற்கு உணர செய்தார்கள்.
பின் சிமுலேஷன் மெஷின் மூலமாக பிரசவ வலியை உணர்ந்து, அதிலிருந்து மீண்டு வந்த டாம், தனது வாழ்க்கையில் இதுபோன்ற வலியை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை என்று கூறினார்.

மேலும் பெண்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் பிரசவத்தின் போது மறுபிறவி எடுக்கிறார்கள்.

பெண்களை நாம் ஆயிரம் மடங்கு அதிகமாக மதிக்க வேண்டும் என்று டாம் மனம் திருந்தி, தனது மனைவி ஜென்னியிடம் மன்னிப்பு கேட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv