கடவுளையே நம்பாதவருக்கு காட்சி கொடுத்த ஜீசஸ்! வைரலாகும் புகைப்படம்,,,


பிரித்தானியா நாட்டில் உள்ள Glasgow நகரை சேர்ந்தவர் Alastair Cantley (23) இவர் சில தினங்களுக்கு முன்னர் அங்கிருந்த வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள கடையின் கதவில் அவர் கண்ட காட்சி அவரை சிலிர்க்க வைத்துள்ளது.

காரணம், அந்த மரகதவில் நீளமான தலைமுடி, தாடியுடன் ஜீசஸ் போன்ற ஒரு உருவம் அவருக்கு தெரிந்துள்ளது.

அந்த உருவத்தை Cantley உடனே தன் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் போல தான் அந்த வணிக வளாகத்துக்கு சென்றேன். எனக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை கிடையாது.

திடீரென எனக்கு அந்த கதவில் ஜீசஸ் உருவம் தெரிந்தது ஆச்சரியப்படுத்தியது. ஒரு முறைக்கு இரு முறை பார்த்தும் அப்படி தான் எனக்கு தெரிந்தது என கூறியுள்ளார்.

இதை என் நண்பர்களிடம் கூறிய போது அது ஜீசஸ் உருவம் கிடையாது. மறைந்த பிரபல இசையமைப்பாளர் Lemmyயின் புகைப்படம் போல அது உள்ளது என அவர்கள் சொன்னதாக கூறியுள்ளார்.

எப்படியிருந்தாலும் விரைவில் அங்கு திரும்ப சென்று அதே ஜீசஸ் உருவம் எனக்கு தெரிகிறதா என பார்ப்பேன் எனவும் Cantley கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv