கனத்த மனதுடன் வெள்ளை மாளிகையை காலி செய்த ஒபாமா...


அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த எட்டு வருடங்களாக மக்களின் பேராதரவுடன் பணியாற்றியவர் பராக் ஒபாமா.

அவரின் பதவி காலம் முடிந்ததையொட்டி, புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார்.

இதனால் தான் இத்தனை வருடம் இருந்த வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறினார்.

டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒபாமா மற்றும் அவரின் குடும்பத்தினர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மேரிலேண்ட் பகுதிக்கு சென்றடைந்தனர்.

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் மேரிலேண்ட் பகுதியில் கலந்துரையாடிய ஒபாமா அதன் பின்னர் தனது மனைவியுடன் கலிபோர்னியாவுக்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்.


இந்த விடுமுறைக்கு பின்னர் ஒபாமா தன் குடும்பத்தாருடன் வாஷிங்டனுக்கு வந்து தங்குகிறார்.

காரணம், அவரின் இளைய மகள் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் அது நிறைவடையும் வரை ஒபாமா குடும்பம் அங்கு தான் தங்குவார்கள் என தெரிகிறது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv