உலகில் தலைசிறந்த நாடு சுவிட்சர்லாந்து தான்? எப்படி தெரியுமா?


தொழில் மேம்படுத்துதல், திறமைகளை வளர்த்தல் மற்றும் அனைத்து விதங்களிலும் அனைவரையும் ஈர்க்கும் தன்மை உடையதில் சுவிட்சர்லாந்து சிறந்த நாடாக விளங்கியுள்ளது.

Global Talent Competitive Index (GTCI), அதாவது சர்வதேச பட்டதாரி பல்கலைக்கழகம் அண்மையில் ஒரு அட்டவணை வெளியிட்டது. அதில் உலகில் தலைசிறந்த நாடுகளாக முதலிடத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் இருப்பதாக கூறியிருந்தது.

இது அவர்களின் நாட்டின் தன்மையை பொறுத்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஈர்ப்பு, திறமையை வளர்த்தல் மற்றும் போட்டித்தன்மை என பலவற்றை வைத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் இந்த நாடுகள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணம், அவர்கள் அந்நாட்டில் உள்ள பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தல், சீரான கல்வி முறையை கொண்டு வருதல், வேலை வாய்ப்பு, உறுதியான கொள்கை, அதிக அளவு தொழில் முனைவோர் மற்றும் பங்குதாரர்களின் நிலைமை என பல உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் முதல்முறையாக திறமைகளை ஈர்க்கும் சிறந்த நகரமாக சுவிட்சார்லாந்தின் Zurich தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக Copenhagen உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து Zurich நகர அதிகாரி ஒருவர் கூறுகையில், திறமையான வீரர்களை ஊக்குவிப்பதன் மூலாமாக உலகின் தலைசிறந்த வீரர்கள் தங்கள் நகரத்தில் உள்ளதாகவும் தலைசிறந்த நகரங்களாக பல இருந்தாலும் இதில் சிறந்த நகரமாக சுவிட்சர்லாந்தின் Zurich நகர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நகரத்தில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் கிடைப்பதாகவும், இந்நகரத்தில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கை ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv