மாரியப்பன், சிந்து, கோஹ்லி, டோனிக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு...


நாட்டின் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 20 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இதன்படி விளையாட்டு பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஒலிம்பிக்கில் சாதனை படைத்த சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹொக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விருது பெறுகின்றனர்.

அதே போல பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய டோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, அவருடைய பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார். சுனிதி சாலமன் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv