நேதாஜி இவர்களால் தான் கொல்லப்பட்டார்: புதிய புத்தகத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்


இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரித்தானிய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் திகதி தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்று கூறப்பட்டு வருகிறது.

நேதாஜி வாழ்க்கை வரலாறு குறித்த ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டபோதும் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்ஷி, “போஸ்: தி இந்தியன் சாமுராய்–நேதாஜி அண்ட் தி ஐ.என்.ஏ. மிலிடரி அசஸ்மெண்ட்“ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் அவர், ஜப்பானுக்கான முந்தைய சோவியத் ரஷ்ய தூதர் ஜேக்கப் மாலிக் உதவியுடன் டோக்கியோவில் இருந்து நேதாஜி சைபீரிய பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நிறுவினார்.

இது, பின்னர் பிரித்தானிய ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதனால் நேதாஜியிடம் விசாரணை நடத்த தங்களை அனுமதிக்கவேண்டும் என சோவியத் ரஷியாவிடம் கோரிக்கை வைத்தது.

இந்த விசாரணையின்போதுதான் பிரித்தானிய ராணுவத்தால் நேதாஜி சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். அவர் விமான விபத்தில் இறக்கவில்லை. இதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று பக்‌ஷி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv