உலகில் எந்த நாட்டு ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தெரியுமா?உலகில் உள்ள ஆண்கள் அனைவரும் பல்வேறு விதமான அனுபவங்களை தங்கள் வாழ்வில் பெற்று வருகின்றனர். ஆனால் அவர்கள் அதை எல்லாம் முறியடித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்கள் படும் வேதனை சொல்வதற்கு இல்லை.

குறிப்பாக கூறவேண்டுமென்றால் மனிதர்களுக்கிடையே உள்ள பாகுபாடு, தொழில் செய்யும் இடத்தில் அவர்களின் உரிமை நிலை நிறுத்த அவர்கள் படும் பாடு, அவர்கள் கூறும் பொதுக் கருத்துக்கள், திருமணம் மற்றும் சமூகத்தின் முன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள என பல உள்ளது.

மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆண்களுக்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் நிறைய மாறுபடுகிறது.

முதல் முறையாக உலக அளவில் ஆண்கள் எந்த நாட்டில் அதிக அளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்பது தொடர்பாக 1,15,000 பேரிடம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

இதில் ஐஸ்லேண்ட், நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள ஆண்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக கூறியுள்ளனர். அதன் படி முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

Iceland
Norway
Denmark
Sweden
Uruguay
Canada
Israel
Netherlands
Switzerland
Luxembourg
இதில் உகாண்டா மற்றும் சூடான் போன்ற நாடுகள் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக எத்தியோப்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv