துணை ஜனாதிபதியை அழ வைத்த ஒபாமா! காரணம் என்ன?


அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் பராக் ஒபாமாவின் ஆட்சி காலம் வரும் 20ஆம் திகதியுடன் முடிகிறது.

இது சம்மந்தமாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிறைவு விழாவில் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தன்னுடன் கடந்த 8 ஆண்டுகளாக துணை ஜனாதிபதியாக பணியாற்றிய ஜோ பிடனை ஒபாமா மேடைக்கு அழைத்தார்.

பின்னர், அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திர ஜனாதிபதி பதக்கத்தை ஜோ பிடனுக்கு ஒபாமா அணிவித்து கவுரப்படுத்தினார்.

பின்னர் ஒபாமா பேசும் போது, வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான பணியில் ஜோ பிடன் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் என புகழாரம் சூட்டினார்.

இந்த கொளரவத்தை சற்றும் எதிர்ப்பார்க்காத ஜோ பிடன் ஆனந்தக் கண்ணீரில் கண் கலங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ஒபாமா போன்ற சிறந்த மனிதரின் பயணத்தில் நான் ஒருபகுதியாக இருந்திருக்கிறேன் என கூறுவதில் பெருமை கொள்கின்றேன் என கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv