ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம்: அதிரடி உத்தரவு- தமிழர்களுக்கு வெற்றி


தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.

முன்னதாக இந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் அரசு இதழில் இன்று மாலையே வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


தமிழகத்தில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம்! அன்றிலிருந்து இன்று வரை...நேரடி பதிவுகள்


  • ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.
  • சட்டமுன்வடிவு மசோதாவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
  • நீதிமன்றத்தில் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டமாக இயற்றப்பட வேண்டும் - ஸ்டாலின்
  • சட்டமுன் வடிவை பார்வையிடுவதற்காக நீதிபதி ஹரிபரந்தாமன், இயக்குனர் கௌதமன், கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிப் ஹாப் ஆதி, ராஜேஷ், ராஜசேகரன், அம்பலத்தரசு மற்றும் போராட்டக்குழு உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளனர்.
  • ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv