கருவில் இருக்கும் மகனை பார்த்த பார்வையற்ற கர்ப்பிணி:


கண்பார்வை இழந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை மருத்துவர்களின் உதவியுடன் தனது மனக்கண்ணால் பார்த்து சந்தோஷம் அடையும் காட்சி, அவருக்கு மட்டுமல்ல அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

Tatiana Guerra(30) என்ற பெண் இளம்வயதில் தனது கண்பார்வையை இழந்துள்ளார்.

மருத்துவமனைக்கு சென்ற இவர், தனது குழந்தையின் வளர்ச்சி குறித்து Ultrascan எடுத்து பார்த்துள்ளார்.

ஆனால், பார்வையற்ற இவரால் குழந்தையை பார்க்க முடியாது. இருப்பினும் Scan கருவியை அவரது வயிற்றில் வைக்கும் மருத்துவர், இது குழந்தையின் மூக்கு, இது கண், இது அவனது கை என ஒவ்வொன்றாக என்று அவரிடம் கூறுகிறார்.

இதை கேட்கும் அவர், அப்படியா என்னால் இதனை உணர முடிகிறது, அவனது மூக்கு சிறிய உருளைக்கிழங்கு போன்று இருக்கிறது என கற்பனை செய்துள்ளேன், அவனது கைகள் குட்டியாக இருக்கிறது என தான் கற்பனை செய்தவற்றை மருத்துவரிடம் தெரிவிக்கிறார்.

இதனைக்கேட்ட மருத்துவர், அந்த Scan- இல் தெரிந்த உருவத்தை அப்படியே சிறிய பொம்மை போன்று செதுக்கி, இதோ உங்களுடைய மகன்....பாருங்கள் என்று கொடுக்கிறார்.

அதனை கையில் வாங்கிய அவர், இன்பத்தில் மூழ்கி, பிறப்பதற்கு முன்னரே எனது மகனை பார்த்ததில் சந்தோஷமடைகிறேன் எனக்கூறி ஆனந்த கண்ணீர் விட்டு மருத்துவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv