பிரித்தானிய இளவரசிகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?


பிரித்தானியாவின் அரச குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வாழ்வார்கள்.

பரம்பரை பரம்பரையாக தாங்கள் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள் ஒருபோதும் மாறுவதற்கு இவர்கள் அனுமதிப்பில்லை.

அரச குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அந்த குடும்பத்திற்கு மருமகளாக வந்து இளவரசியாக மாறும் பெண்கள் கண்டிப்பான முறையில் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களை கண்டிப்பான முறையில் பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

அப்படி, பிரித்தானிய இளவரசிகள் பின்பற்ற வேண்டியவைகள் இதோ,

பிரித்தானிய அரச குடும்பத்தை பொறுத்தவரை சில முக்கிய முடிவுகளை மகாராணி எலிசபெத் அவர்கள் தான் எடுப்பார்கள்.

இவரது முடிவுக்கு அனைவரும் கண்டிப்பான முறையில் ஒத்துழைக்க வேண்டும். மகாராணியோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் தனது உணவினை சாப்பிட்டு முடிக்காத வரைக்கும் யாரும் எழுந்திருக்ககூடாது.

பிரித்தானியா இளவரசி என்ற முறையில் தலையில் க்ரீடம் அணிவிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு என்று செல்லப்பெயர்கள் எதுவும் வைத்துக்கொள்ள கூடாது.

குறிப்பாக 24 மணி நேரம் சிறப்பான முறையில் ஆடை அணிந்து, பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும்.

இது முக்கியமான ஒன்று. பிரித்தானிய இளவரசி கண்டிப்பான முறையில் தொண்டு நிறுவனங்களுக்கு கண்டிப்பான முறையில் தானம் தர்மங்கள் செய்தாக வேண்டும்.

அல்லது ஏதேனும் தொண்டு நிறுவனத்தை பொறுப்பெடுத்து நடத்துவதோடு மட்டுமல்லாமல் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெற வேண்டும்.

அரச குடும்பத்தினர் என்றாலே பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேச வேண்டும் என்பதால் அரச குடும்பத்து இளவரசிகள் கண்டிப்பான முறையில் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

உணவருந்தும்போது தனியாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. மேலும் உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் சாப்பிடும் உணவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு உணவுகள் தயார் செய்யப்படும்.

அரச குடும்பத்தின் இளவரசியாவதற்கு முன்னர், அவர் என்ன பணியில் இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த பணியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆக மொத்தத்தில் 24 மணி நேரம் இளவரசி என்ற பணியை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv