ஜெயலலிதாவின் இரு கால்களையும் வெட்டி எறிந்து விட்டு...வெளியான பரபரப்பு அறிக்கை


சசிகலா பொது செயலாளர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் முதன்மை பேச்சாளார்களில் ஒருவரான சிதம்பரம் ஜெயவேல் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது, மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கட்சியில் இணைந்தவர் சசிகலா.

அப்படிபட்ட ஒருவரை கட்சியில் இருப்போர் தங்கள் சொத்துகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஆதரிக்கலாம்.

ஆனால், கழகத்தின் அடிமட்ட தொண்டன் சசிகலாவை ஆதரித்து தலைவியாக ஏற்றுக் கொள்ளமாட்டான்.

ஜெயலலிதாவின் இரு கால்களையும் வெட்டி எடுத்துவிட்டு புரட்சிதலைவி நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார் எனவும், தொண்டையில் ஓட்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து கொண்டு வந்த கிச்சடி சாப்பிட்டார் என்றும் பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு வந்துள்ளனர்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கட்சியை சசிகலா கையில் கொடுத்துள்ளது குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போன்றாகிவிட்டது.

எனவே, கட்சியின் பேச்சாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எம்ஜிஆர் இரட்டைஇலை சின்னத்தை மட்டும் விட்டுவிட்டு செல்லவில்லை, சின்னம்மாவையும் விட்டுச்சென்றார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் கூறித்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் என்று கிண்டலாகவும் தெரிவித்துள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv