சுவிஸில் 8000 அகதிகள் மாயம்: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்


சுவிட்சர்லாந்தில் 2016ம் ஆண்டு சுமார் 8000 அகதிகள் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது.

பதிவின் படி 2016ம் ஆண்ட ஜனவரி முதல் நவம்பர் இடையே 8,166 அகதிகள் காணாமல் போயுள்ளதாக மாநில குடியமர்ந்தவர்களுக்கான செயலகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாநில குடியமர்ந்தவர்களுக்கான செயலகத்தின் செய்தி தொடர்பாளர் Martin Reichlin கூறியதாவது, காணாமல் போன அகதிகள் செயலகத்தில் தகவல் அளிக்காமல் குடியேறிகள் விதிமுறைகளை மீறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் ஆப்பிரிக்கா அகதிகளே அதிகமானோர் வெளியேறியுள்ளனர். மற்றொரு நாட்டில் உறவினர்களுடன் சேர விரும்பியவர்கள், தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிந்த அகதிகளே தகவல் அளிக்காமல் வெளியேறியுள்ளனர்.

அறிவிக்காமல் வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஆவணமற்ற குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளியேறிய அகதிகள் அதிகமானோர் ஜேர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv