கடுமையான பனிமூட்டம்...தீப்பிடித்து எரிந்த விமானம்! பயணித்த 20 பேர் பலி....!


கிர்கிஸ்தானின் மனாஸ் விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் கார்கோ ஜெட் 6491 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள், ஒரு விமானி உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கி ஏர்லைன்ஸ் கார்கோ ஜெட் விமானம் ஹாங்காங்கில் இருந்து கிர்கிஸ்தான் தலைநகரான Bishkek நகருக்கு சென்று கொண்டிருந்தது.

கிர்கிஸ்தானின் மனாஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, மோசமான காலநிலையின் காரணமாக விபத்தில் சிக்கியது.

இதில் அருகிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததில் விமானம் தீப்பிடித்து எரிந்தது, இந்த விபத்தில் ஆறு குழந்தைகள், ஒரு விமானி உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மீட்பு படையினர் சடலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், எனவே தற்காலிகமாக மனாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv