116 கோடி! மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவ செலவு வெளியானது


கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவ செலவு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதான பார்மூலா -1 கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமேக்கர் 7 முறை பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.

தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த மைக்கல் ஷூமேக்கருக்கு தொடர் சிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜெனிவா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது மருத்துவச் செலவாக கடந்த 3 ஆண்டுகளில் 14 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.116 கோடி. ஒரு வாரத்திற்கு 115,000 பவுண்டுகள் செலவாகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 லட்சம். இத்தனை கோடி செலவழித்த பின்னரே, மைக்கல் ஷூமேக்கர் சுய உணர்வுக்குத் திரும்பியுள்ளார்.

ஷூமேக்கரின் மேலாளர் சபின் கெம் விடுத்துள்ள அறிக்கையில், ஷூமேக்கரின் உடல்நிலை பொதுப்பிரச்னை அல்ல. அதனால், அவரது உடல் நிலை குறித்து நாங்கள் எதுவும் மக்களிடம் தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv