உலகின் மிக பழைமையான நீர் கனடாவில் கண்டுபிடிப்பு...


உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக பழைய நீர் கனடாவில் இனங்காணப்பட்டுள்ளதாக கனடிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் உள்ள ஒரு சுரங்கத்தின் ஆழத்தில் காணப்பட்ட நீர்த்தேக்கம், குறைந்தது 500 மில்லியன் ஆண்டு பழமையானது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த நீர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பாரிய நீர்த்தேக்கம் ஒன்று காணப்படுவதாக குறித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நீரில் வாழ்ந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரினம் விட்டுச்சென்ற இரசாயன சுவடுகள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 3 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய அது குறைந்த பட்சம் 2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

நீரை ஆராய்ச்சி செய்வதன் மூலம் உலகில் வேறெங்கேனும் உயிரினங்கள் வாழ்ந்துள்ளனவா என்பதற்கான அறிகுறிகள் தென்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv