ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு-படங்களின் தொகுப்பு...-Photos
தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார்.
ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 1/2 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார்.
படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது.
பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.

1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார்.
மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரை உலக பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார்.
ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965-ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை" தான் அவரது முதல் தமிழ்ப்படம்.
வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த 'எபிசில்' (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.
முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார்.
சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் 'வேதா')
ஜெயலலிதாவின் 100-வது படமான "திருமாங்கல்யம்" 1977-ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1980-ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை

TAMIL MP3 &SONGS இணையங்கள்
MP3 WORLD
Tamil Ent
MP3 CITY
OOSAI
DHOOL
RAAGA
Englishjet
OLDTAMIL
CHALO
Tamil Strings
Tamil GSM
Good Lanka
TAMILAREA
Tamil Ent
MP3 CITY
OOSAI
DHOOL
RAAGA
Englishjet
OLDTAMIL
CHALO
Tamil Strings
Tamil GSM
Good Lanka
TAMILAREA

பல்கலைக்கழகங்கள்
பல். யாழ்ப்பாணம்
பல். மொரடுவ
பல். களனிய
பல். பேராதனியா
ஜெயவர்தனபுர
பல். கொழும்பு
திறந்த பல். கழகம்
பல். மொரடுவ
பல். களனிய
பல். பேராதனியா
ஜெயவர்தனபுர
பல். கொழும்பு
திறந்த பல். கழகம்

கோவில் தளங்கள்
திருக்கேதீஸ்வரம்
களு.பிள்ளையார்.
கோணைதென்றல்
மூத்த விநாயகர்.
ஸ்ரீகனகாம்பிகை.
Anjaneyar
சிவத்தமிழோன்.
Amman ealing.
சுவிஸ்ஆலயம்
Sivankovil
முருகன்ஆலயம்.
ஸ்ரீ கிருஷ்ண.
இணுவில்.
Arunachaleswarar
களு.பிள்ளையார்.
கோணைதென்றல்
மூத்த விநாயகர்.
ஸ்ரீகனகாம்பிகை.
Anjaneyar
சிவத்தமிழோன்.
Amman ealing.
சுவிஸ்ஆலயம்
Sivankovil
முருகன்ஆலயம்.
ஸ்ரீ கிருஷ்ண.
இணுவில்.
Arunachaleswarar

வானொலிகள்
விடியல் FM
சூரியன் FM Live
ஐ.பி.சி தமிழ்
தமிழ்க்குரல்
தமிழருவிஅவுஸ். தமிழ் ஒ.கூட்டு..
கனேடிய தமிழ்
லங்காஸ்ரீ FM
வெற்றி FM
சக்தி FM
சூரியன் FM Live
ஐ.பி.சி தமிழ்
தமிழ்க்குரல்
தமிழருவிஅவுஸ். தமிழ் ஒ.கூட்டு..
கனேடிய தமிழ்
லங்காஸ்ரீ FM
வெற்றி FM
சக்தி FM

தமிழ் இணைய செய்திகள்

தமிழ் இணைய செய்திகள்

கிராம தளங்கள்

Post a Comment