அமெரிக்காவை அழிக்க வடகொரியா திட்டம்! அதிர்ச்சி தகவல்கள்


அடுத்த 12 மாதங்களுக்குள் அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதலை நடத்த KIM Jong-un ஆளும் வடகொரியா அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வடகொரியாவை ஆளும் சர்வாதிகாரி KIM Jong-un திடீரென அதிரடியான விடயங்களை செய்வதில் கைதேர்ந்தவர் என்பது உலகறிந்த செய்தி.

தற்போது மீண்டும் KIM ஒரு அதிரடியை கையாளவிருக்கிறார். அமெரிக்க மீது அணுவாயுத தாக்குதல் நடத்துவது தான் அந்த திட்டம்! அதற்காக அந்நாடு அணுவாயுதங்களை வலிமையாக தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் கூட ஐந்தாவது அணுவாயத சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வடகொரிய அரசு. உள்நாட்டு அரசியல் நடைமுறைகள் விதிமுறைகள் படி அமெரிக்காவும், தென் கொரியவும் வடகொரியா அணுவாயுத வளர்ச்சியில் ஈடுப்பட்டிருப்பதை தடுக்காது என அந்நாடு கருதுகிறது.

மேலும் முக்கிய ஆயுதமான Musudan missiles என்னும் 4000 கிலோ மீட்டர் அளவு போகும் ஏவுகணையை வைத்து அமெரிக்காவின் குவாம் தாயகத்தை கூட தகர்க்க முடியும் என்பது முக்கிய விடயமாகும்.

தற்போது கடுமையான ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வடகொரிய ராணுவத்தினர் சீக்கிரம் இந்த தாக்குதலுக்கு முழுவீச்சில் தயாராவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv