பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்: நாசா பரபரப்பு தகவல்...


எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் NEOWISE என்ற அதிநவீன தொலைநோக்கி கருவியின் பயன்பாட்டை நாசா தொடங்கியது.

இக்கருவி மூலம் வானில் அன்றாடம் நிகழும் எரிக்கல் மற்றும் வால் நட்சத்திரங்களின் பயணங்கள் குறித்து நாசா கூர்ந்து கவனித்து வருகிறது.


via GIPHY

இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

C/2016 U1 NEOWISE எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரத்தை பைனாக்குலர் கருவி மூலமே பார்க்க முடியும். இந்த வால் நட்சத்திரத்தின் ஒளியானது பிரகாசமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை நேரத்தில் பூமியை கடக்க உள்ள இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நாசா அறிவித்துள்ளது.

பூமியை கடக்கும் இந்த வால் நட்சத்திரம் மெர்குரி கிரகம் வழியாக கடந்து செல்லும்.

மேலும், சூரிய குடும்பத்திலிருந்து வெகு தொலைவிற்கு பயணமாகும் இந்த வால் நட்சத்திரம் அதன் பிறகு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அங்கு சுற்றி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv