உலகின் உயரமான பாலம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது


உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் நேற்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.

பாரிய பள்ளத்தாக்கின் மேல் 570 மீற்றர் உயரத்தில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் உயரமானது கிட்டத்தட்ட 200 மாடிக்கட்டிடங்களின் உயரத்திற்கு சமமானதாகும்.

இப்பாலத்திற்கு பெய்பான்ஜியாங் எனப்பெயரிடப்பட்டுள்ளது. சீனாவின் தென் மேற்கு மாகாணங்களான யுனான் மற்றும் குளோகு ஆகிய மாகாணங்களை இணைக்கும் வகையில் குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பெய்பான்ஜியாங் பாலத்தின் நிர்மானப் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பாலத்திற்கு 1341 மீற்றர் நீளமான இணைப்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இதற்கென சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv