பணயக்கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் பொகொ ஹரம்!


பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்களை பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாக்குவது எப்படி என பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு சிறுவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு போன்று தாங்களும் செயல்பட்டு வருவதாக கூறும் பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு, தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது குறித்து சிறுவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு சிறுவர்களை களமிறக்கி அதற்கென குழுக்களையே உருவாக்கி தாக்குதல் பயிற்சியும் அளித்து வருகிறது பொகொ ஹரம்.

குறித்த சிறுவர் படை ஒன்றில் இருந்து தப்பி வந்த 15 வயது சிறுவன் அஹமது, தமக்கு நேர்ந்த துன்பங்கள் மற்றும் அவலங்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான்.

பொகொ ஹரம் தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் சிலர் அங்கிருந்து தப்பியபோது அவர்களை துரத்தி செல்வதாக கூறி, அஹமதும் தப்பியுள்ளான்.

தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் வலி பொறுக்க முடியாமல் உதவி கேட்டு அழுவார்கள், ஆனால் எவ்வித உதவியும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

மட்டுமல்ல அவர்கள் படும் துயரங்களை பொகொ ஹரம் தீவிரவாதிகள் கண்டுகொள்வதில்லை. தங்களுக்கு ஒத்துழைக்காத சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் சில நேரம் கடுமையாக தாக்கப்படும் சூழலும் ஏற்படும், சில நேரம் துப்பாக்கி முனையில் பலாத்காரம் நடப்பதும் உண்டு என அஹமது தெரிவித்துள்ளான்.

பொகொ ஹரம் தீவிரவாதிகள் அளிக்கும் பணியை திறம்பட செய்து முடித்தால் விருப்பமான பெண்களுடன் உல்லாசத்தில் ஏற்படலாம் என்பதும் அங்கிருக்கும் புது விதி எனவும், இதற்கென்று பாலியல் அடிமைகளை பொகொ ஹரம் தீவிரவாதிகள் உருவாக்கி வைத்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv