பூமியிலிருந்து மனித இனம் அழியும்...வேகமா இதை கண்டுபிடிங்க: எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்!


பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் பூமியில் இன்னும் மனிதர்கள் ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே வாழமுடியும் என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Stephen William Hawking. பிரபல விஞ்ஞானியான இவர் அண்மையில் பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சி விழாவிற்கு சென்றுள்ளார்.

மிகப் பெரிய அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்குப் பிறகு ஐக்யூ எனப்படும் மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படுபவர் Stephen William Hawking.

அந்த விழாவின் போது போது Stephen William Hawking பூமியின் நிலைமையை குறித்து கூறியது அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பூமியில் மனித இனம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே வாழமுடியும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பூமியில் மனித இனம் வாழ்ந்தற்கான அடையாளம் கூட இல்லாமல் அழிவைச் சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.

இதிலிருந்து தம்மை காத்துக் கொள்ளவேண்டுமென்றால், விண்வெளியில் பூமியைப் போன்றே உயிர்வாழ உகந்த சூழல் இருக்கும் கோளினைக் கண்டுபிடிப்பதே ஒரே வழி எனவும் கூறியுள்ளார்.

மனித இனத்தின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக புதிய கோளைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv