7 வயது மகளை முத்தம் கொடுத்து ஜிகாதி தாக்குதலுக்கு அனுப்பிய கொடூர பெற்றோர்....


சிரியாவில் 7 வயது மகளை பெற்றோர் முத்தம் கொடுத்து தற்கொலை தாக்குதலுக்கு வழி அனுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வேதனைமிக்க காட்சியில், 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஒரு பெண்ணை கட்டி பிடிக்கின்றனர். அந்த பெண் அந்த சிறுமிகளின் தாய் என கூறப்படுகிறது.

மேலும் சிறுமிகளின் தந்தை, வெற்றிகரமாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை முன்னெடுப்பது எப்படி என்பதை குறித்து குழந்தைகளுக்கு விரிவாக கூறுகிறார்.

3 நிமிட வீடியோ இறுதியில் இரண்டு சிறுமிகளும் பர்தா அணிந்து அல்லாஹு அக்பர் என சொல்விட்டு அந்த அறையை விட்டு செல்கின்றனர்.

இதளையடுத்து ஒரு மணிநேரத்திற்கு பின்னர் 7 வயது சிறுமி உடம்பில் வெடிகுண்டு பெல்ட் அணிந்து டமாஸ்கஸில் உள்ள பொலிசில் நிலையத்தில் நுழைந்துள்ளார்.

தூரத்திலிருந்து ஒருவர் அதை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று பொலிசார் காயமடைந்துள்ளனர். இந்த தற்கொலை தாக்குலுக்கு பின்னணியில் எந்த ஜிகாதி குழு உள்ளது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், பெற்றோர்கள் பெற்ற மகளை தற்கொலை தாக்குலுக்கு வழி அனுப்பி வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv