ரூ.4000 கோடி கடனை திருப்பி செலுத்தும் கியூபா அரசு: எப்படி தெரியுமா?


செக் குடியரசு நாட்டிற்கு செலுத்த வேண்டிய கடனை ரூ.4000 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை இலவசமாக அளித்து தீர்க்க கியூபா அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான செக் குடியரசுக்கு கியூபா அரசு ஒரு பெரும் தொகையுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை நீடித்து வந்துள்ளது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த ஆலோசனைகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து செக் குடியரசு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செக் குடியரசு நாட்டிற்கு செலுத்த வேண்டிய கடனை மது பாட்டிகள் மூலம் திருப்பி செலுத்த கியூபா அரசு முன் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் கியூபாவில் தயாரிக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ரம் மது பாட்டில்களை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 1.6 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மது பாட்டில்கள் செக் குடியரசு நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து படிப்படியாக சுமார் 222 மில்லியன் பவுண்ட்(4119,40,41,012 இலங்கை ரூபாய்) மதிப்பிலான மது பாட்டில்கள் செக் குடியரசு நாட்டிற்கு அனுப்பப்படும்.

இதன் மூலம் செக் குடியரசு நாட்டில் அடுத்து 100 ஆண்டுகளுக்கு தேவைக்கும் அதிகமான மது கையிருப்பில் இருக்கும் என செக் குடியரசு தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv