கனடாவில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த தோட்டம் கண்டுபிடிப்பு


கனடா நாட்டில் 3,800 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்நாட்டின் வடமேற்கே உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பசிபிக் கடலோரப் பகுதியை ஒட்டி நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான தோண்டும் பணிகளின்போது, கடலோரமாக, மிகப்பெரிய உருளைக்கிழங்கு குவியல் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்துவந்த தொல்பொருள் துறையினர், அந்த இடத்தை கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்தனர்.

இதில், 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த இடத்தில் உருளைக்கிழங்கு தோட்டம் செயல்பட்டுவந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

நீண்டநெடுங்காலமாக குறிப்பிட்ட இடத்தில் கடல்நீர் சூழ்ந்திருந்ததால், அழியாமல் அப்படியே தரைக்கடியில் உருளைக்கிழங்கு தோட்டம் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக, ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கான சான்றாக, உருளைக்கிழங்குகள், செடிகளின் வேர் என அனைத்தையும் அவர்கள் தோண்டியெடுத்துள்ளனர். இந்த உருளைக்கிழங்கு இந்தியாவில் பயிரிடப்படும் உருளைக்கிழங்கு இனத்தைச் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்துவந்த கட்ஸி பழங்குடியின மக்கள், இந்த உருளைக்கிழங்கு தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv