இதிலும் அமெரிக்கா தான் முதலிடமாம்..!


2016 ஆம் ஆண்டு முடிவு பெறுவதை ஒட்டி இந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனத்திடம் அதிக தகவல்களை கேட்டு பெற்றிருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவிலான மக்கள் அதிகளவு பயன்படுத்தக்கூடிய வலைதளமாக பேஸ்புக் வலைதளம் உள்ளது.

இந்த பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து உலக நாடுகள் தங்களது சட்ட வரம்பை மீறி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் பதிவுகளை பதிவிடும் நபர்கள் குறித்த தகவலை கேட்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு தகவல் கேட்டறியும் நாடுகளின் பட்டியலை வருடா வருடம் பேஸ்புக் நிறுவனம் வெளியிடும்.

இதன்படி, இந்த வருடத்தின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்க அரசானது இந்தாண்டின் முதல்பாதியில் 38,951 பயனர்கள் மற்றும் கணக்குகள் குறித்து 23,854 தகவல்களாய் பேஸ்புக் நிறுவனத்திடம் கேட்டு முதல் இடத்தில் இருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக இந்திய அரசு 6,324 தகவல்களை பேட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv