2016 வாகன விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?


வாகன விபத்துக்களில் இந்த ஆண்டில் 2900 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 25ம் திகதி வரையில் 41000 பேர் வாகன விபத்துக்களில் சிக்கியுள்ளனர்.

2015ம் ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2816 ஆக சுகாதார அமைச்சிற்கு தகவல் கிடைத்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் மட்டும் வாகன விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 817 பேர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிர்ச் சேதங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv