2016ம் ஆண்டின் உலக அழகி இவர் தான்


2016ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2016 உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

அதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

எனினும் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகிப் பட்டம் வென்றார்.

கல்லூரி மாணவி ஆன இவர் ஸ்பெயின், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு 2015ஆம் ஆண்டு பட்டம் வென்ற ஸ்பெயின் அழகி மிரேயா லலாகுனா கிரீடம் சூட்டினார்.

இப்போட்டியில் 2ஆவது இடங்களை டொமினிகள் குடியரசு நாட்டைசேர்ந்த யரீட்ஷா மிகுலெனினா ரெயஸ் ரமிரெஷ் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த நடாஷா மனுலாவும் தேர்வாகினர்.

கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த அழகிகள் 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv