இளம்பெண்ணை கொன்றால் ரூ.15 கோடி பரிசு: ஐ.எஸ் அமைப்பு அதிரடி அறிவிப்புஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராடுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறிய இளம்பெண் ஒருவரை கொலை செய்யும் நபருக்கு ரூ.15 கோடி பரிசு வழங்கப்படும் என தீவிரவாதிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட ஜோன்னா பழனி(23) என்பவரது குடும்பம் டென்மார்க் நாட்டில் குடியேறி அகதி உரிமையை பெற்றுள்ளது.

எனினும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடாவும், உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராட வேண்டும் என ஜோன்னா பழனி முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு கல்லூரி படிப்பை துறந்துவிட்டு டென்மார்க் நாட்டை விட்டு வெளியேறி சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

ஆனால், துரதிஷ்டவசமாக சிரியா எல்லையில் ஜோன்னா பழனி கைது செய்யப்பட்டு டென்மார்க் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற்றிய குற்றத்திற்காக அவர் மீது டென்மார்க் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுக்கு எதிராக போராட துடித்துக்கொண்டு இருக்கும் ஜோன்னா பழனியை கொலை செய்ய வேண்டும். இந்த கொலையை செய்து முடிக்கும் நபருக்கு 1 மில்லியன் டொலர்(14,95,10,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜோன்னா பழனி மீதுள்ள குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் 20-ம் திகதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv