கோவிலுக்கு 1.50 லட்சத்தில் வெள்ளிக் கிரீடம் காணிக்கை அளித்த பிச்சைக்காரர்!


இந்தியாவில் பொதுமக்கள் அனைவரும் ஏடிஎம் வரிசையில் நின்று கொண்டிருக்க, ராமர் கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் சுமார் 1.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை காணிக்கை செலுத்தியிருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நவம்பர் 8ம் திகதி 500 ரூபாய் மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது, அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால் அதற்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை, பொதுமக்கள் அனைவரும் ஏடிஎம், வங்கிகள் போன்ற இடங்களில் கால் கடுக்க நின்று பணங்களை பெற்றுச் செல்கின்றனர்.

அதிலும் குறிப்பிட்டத் தொகைத் தான் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பெற முடிகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாடி ரெட்டி (75). இவர் தன்னுடைய இளம் வயதில் இருசக்கர ரிக்சா இழுத்தல் போன்ற பல வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

ஆனால் தற்போதுஏற்பட்ட வயது முதிர்வு காரணமாக வேலை செய்யமுடியாமல், கடந்த சில ஆண்டுகளாக விஜயவாடா நகரில் உள்ள ராமர் கோயில் முன்பு பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.


இவருக்கு நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து கிடைக்கும் காசு, அவரின் தேவையைக் காட்டிலும் மிஞ்சிய காசுகளை பக்திப்பணிகளுக்கு செலவு செய்ய திட்டமிட்டு சேமித்துதான் இந்த காணிக்கையை செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து யாடி ரெட்டி கூறுகையில், நான் இந்த அளவு உடல்நலத்துடன் இருப்பதற்கு கடவுள்தான் காரணம். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ராமர் கோவிலுக்கு ரூ.1.50 லட்சத்தில் வெள்ளிக் கிரீடம் காணிக்கை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமர் கோவிலின் நிர்வாகத் தலைவரும் எம்.எல்,ஏ.வுமான கவுதம் ரெட்டி கூறுகையில், இந்த கோவிலின் வாசலில் யாடி ரெட்டி பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தின் மூலம், கடவுளுக்கு பணிகள் செய்வதன் மூலம் பணம் வாழ்க்கையல்ல என்பதை நிரூபித்துள்ளார் என்று கூறினார்.

பிச்சைக்காரர் யாடி ரெட்டி இதற்கு முன், முட்யாலம்பாடு நகரில் உள்ள ராமர் கோயிலுக்கும், சாய்பாபா கோயிலுக்கும் இதுபோல் ரூ.1.50 லட்சத்தில் வெள்ளி கிரீடம் காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், அன்னதானத்துக்காக ரூ.20 ஆயிரம்வரை நன்கொடை கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv