101 வயது முதியவருக்கு 13 ஆண்டு சிறை! அதிரடி தண்டனைக்கு பின்னணி என்ன?


பிரித்தானியாவில் 101 முதியவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரால்ப் கிளார்க் என்ற நபருக்கு இந்த அதிரடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1970ம் ஆண்டு கிளார்க் லொறி ஓட்டுநராக பணியாற்றி வந்த போது சகோதரிகளான 4 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களுடைய சகோதரனை தாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடிய ரால்ப் கிளார்க், அந்தப் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்களை கண்ட அவரால் பாதிக்கப்பட்ட சகோதரிகள் உடனே பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் கிளார்க் ரால்ப்பை கைது செய்துள்ளனர்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளார்க் ரால்ப்பை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ரால்ப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv