நிர்வாண படங்களை வெளியிட்ட அழகி: ’மிஸ் பிரான்ஸ்’ பட்டத்தை இழந்த பரிதாபம்....


பிரான்ஸ் நாட்டில் அழகி ஒருவர் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டது அம்பலமானதால் அவருக்கு அளிக்கப்பட்ட மிஸ் பிரான்ஸ்-2016 என்ற பட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்த ‘மிஸ் பிரான்ஸ் -2016’ என்ற அழகு போட்டி நிகழ்ந்துள்ளது.

இப்போட்டியில் 22 வயதான Margaux Legrand-Guerineau என்ற இளம்பெண் பங்கேற்று அப்பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் மேலாடை இன்றி இருப்பது போன்ற அவரது படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

எனினும், அப்புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்து வெளியிடப்பட்டவை ஆகும்.

ஆனால், போட்டியின் விதிமுறைகள் அடிப்படையில் இதில் பங்கேற்கும் அழகிகள் கடந்த ஆண்டுகளில் கூட தங்களுடைய நிர்வாணப்படங்களை வெளியிட்டுருக்க கூடாது என்பதாகும்.

அழகி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட ‘மிஸ் பிரான்ஸ்-2016’ என்ற பட்டம் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv