பெற்றோரை சுத்தியலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன்...


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tyler Hadley (17) என்ற மாணவன் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருப்பதற்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

இந்த விருந்துக்கான அழைப்பிதழை தனது பேஸ்புக் வாயிலாக அனைவரிடமும் தெரிவித்திருந்தான். இந்நிலையில் விருந்து தொடங்குவதற்கு முன்னர் தனது தாயாருடன் இவனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தனது செலவுக்கு தேவையான பணத்தினை கொடுக்காத காரணத்தால் சண்டையிட்டுள்ளான். இவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிடவே கோபம் கொண்ட Tyler, கத்தியை எடுத்து தனது தாயாரை குத்தியுள்ளான்.

இதனை தடுக்க வந்த தந்தையையும் கத்தியால் குத்திய இவன், பின்னர் சுத்தியலை எடுத்து இவர்கள் இருவரின் தலையிலும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளான்.

அதன் பின்னர் பெற்றோரின் உடலை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு, விருந்துக்கு நேரம் ஆகிவிட்டதால், அவசரம் அவசரமாக ரத்தகறைகளை துடைத்துள்ளான்.அதன்பின்னர் வீட்டில் நடைபெற்ற விருந்தில், எவ்வித பதற்றத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நண்பர்களோடு சேர்ந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடியுள்ளான்.

விருந்து முடிந்த பின்னர் தனது நெருங்கிய தோழனான மிச்செலிடம், தனது பெற்றோரை கொலை செய்ததை குறித்து கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மிச்செலுக்கு பயத்தால் உடல் நடுங்கியுள்ளது.

தனது காதலன் மிச்செல்லின் நடுக்கத்தை கண்ட மோர்கன், என்ன நடந்தது என்பதை அவனிடம் விசாரித்ததில், தனது நண்பன் கூறிய அனைத்தையும் மிச்செல் தனது காதலியிடம் தெரிவித்துள்ளான்.

இந்த தகவலை கேட்ட அடுத்த நொடியே, மோர்கன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கிய விருந்து மறுநாள் காலை 3 மணிவரை நடைபெற்றது.

அதிகாலை 4.20 மணிக்கெல்லாம் பொலிசார், Tyler வீட்டினை நெருங்கியுள்ளனர். அவனது வீட்டினை சோதனை செய்து பெற்றோரின் உடல்களை கண்டுபிடித்த பொலிசார், பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், Tyler- ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், Tyler மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு வாழ்நாள் சிறைதண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv