அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், ‘ஓசன்ஸ்12’ என்ற பெயரில் விளையாடிய ஈழத் தமிழ் இளைஞர்கள் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

‘ஓசன்ஸ் 12’ சுதாகர் சேனாதிப்பிள்ளையின் தலைமையில் விளையாடியது.

தேசிய மட்டத்திலான போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் அணி அவுஸ்திரேலியாவின் கவனத்தைப் பெற்றுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv