வந்துவிட்டார்கள் செயற்கை மனிதர்கள்!


விஞ்ஞான உலகானது பல்வேறு கண்டுபிடிப்புக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

இவர்களில் கண்டுபிடிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களை (இயந்திரம்) உருவாக்குவதும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

இது இயற்கையான மனித உருவிற்கு நிகராக இருக்க வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் நைலோன் இழைகளைப் பயன்படுத்தி நார் அமைப்பிலான தசைகளை உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பமானது மிகவும் செலவு குறைந்ததாக இருப்பதுடன், தசைகள் சிறந்த மீள்தன்மை கொண்டதாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இவ் ஆய்வில் MIT - Massachusetts Institute of Technology ஆய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இத் தொழில்நுட்பம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ரோபோக்களிலும் பயன்படுத்தப்பட்டு நிஜமான மனித தோற்றத்தை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv