சாம்சங் கேலக்ஸி J5 போனும் வெடிக்கிறது! ஓர் எச்சரிக்கை...


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணின் சாம்சங் போன் வெடித்ததால் சாம்சங் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அண்மை காலமாக சாம்சாங் நிறுவனத்தை சேர்ந்த கேலக்ஸி நோட் 7 வெடித்து வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன் விளைவாக வாடிக்கையாளர்களிடம் போன்கள் அனைத்தையும் சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்றது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சாம்சங் கேலக்சி J5 வெடித்து விட்டதாக புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த வாரம் தன்னுடைய நான்கு வயது குழந்தை போனை பயன்படுத்திக் கொண்டிருந்த போது அதிகளவு சூடாகி புகை வந்ததை பார்த்ததாகவும், அடுத்து வெடித்து சிதறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள சாம்சங் நிறுவனம் அது நிரூபிக்கப்பட்டால் அதற்கு பதிலாக மற்றொரு சாம்சங் போன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சாம்சங் வாஷிங்மெஷின்களும் வெடித்து சிதறுவதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv