அடப்பாவி! தூக்கு கயிறுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்,,,


துணியை கழுத்தில் தூக்குக் கயிறு போல் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே செல்ஃபி எடுத்து கொண்டு பின்னர் அந்த கயிறிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிராந்தி குமார் (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார்.

இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் அவர் சடலத்தை கைப்பற்றும் போது கிராந்தி குமார் பாக்கெட்டில் செல்போன் இருந்துள்ளது.

அதை எடுத்து ஆய்வு செய்த பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மின் விசிறியில் துணியைக் கட்டி அதை கழுத்தில் தூக்குக் கயிறு போல் கட்டிக்கொண்டு அவர் தன்னைதானே எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் அதில் இருந்துள்ளது.

மேலும், குடும்பப் பிரச்சனை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் அவரது இல்லத்தில் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஐதராபாத் பொலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv