பெண்கள் அதிகமாக பலாத்காரம் செய்யப்படுவது எந்த நாட்டில்?


பலாத்கார கொடுமைகள் மற்றும் வன்முறை சம்பவங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஒழிக்கும் தினம் இன்று.

இதனை முன்னிட்டு ACTIONAID என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வாக்குபெட்டி மற்றும் இணையதளம் வாயிலாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.

இதில், பிரேசிலில் 16% பெண்களும், லண்டனில் 12% பெண்களும், தாய்லாந்தில் 8% பெண்களும் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.

இதில் அதிகப்படியாக பெண்கள் பாதிக்கப்படுவது இந்தியா மற்றும் பிரேசிலில் தான்.

பிரேசிலில் 87% பெண்களும், இந்தியாவில் 73% பெண்கள் வன்முறையினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.

82% பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலும் 25 முதல் 34 வயதினரே தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv