விமானம் புறப்படும்போது கழிவறை பயன்படுத்தக் கூடாது ஏன் தெரியுமா?


விமானமானது டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிப்பறையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவார்கள்.

இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

விமானம் 1000 அடிக்கு கீழே பறந்துக் கொண்டிருக்கும் போது, பயணிகள் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருக்க வேண்டும் என்பது சர்வதேச விமான போக்குவரத்தின் சட்டமாக உள்ளது.
விமானத்தின் கழிவறை ஃப்ளோர் சற்று கடினமாக இருக்கும் என்பதால் எளிதாக அடிப்பட வாய்ப்புகள் உள்ளது.
விமானத்தின் ஊழியர்கள் பயணிகள் மீது இருக்கும் அக்கறை மற்றும் கவனம் காரணமாகவும், சர்வதேச விமான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும், பயணிகள், விமானம் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த தடை கூறப்படுகிறது.
எனவே தான் நீண்ட நேர விமான பயணத்தின் போது, பணிப்பெண்கள் சில மணி நேரத்திற்கு முன்பே, கழிவறை பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள், விமானம் தரை இறங்க தயாராகிறது என்று எச்சரிக்கை செய்வார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv