சிறுவனின் கொத்தடிமை வாழ்க்கை 3 வேளையும் பழைய சோறு.....


3 வேளையும் பழையசோறு சாப்பிட்டு கொத்தடிமையாக வாழ்ந்து வந்த சிறுவனை சைல்ட்லைன் அமைப்பினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன்(9) என்ற சிறுவனின் பெற்றோர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர்.

இதனால் அனாதையான அச்சிறுவன் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தான். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் சிறுவன் ஜெயராமனை கொத்தடிமையாக அழைத்து வந்து பிள்ளையார்பட்டி அருகே ஆடுகள் மேய்க்க வைத்துள்ளார்.

இந்த சிறுவன் பொறுப்பில் 120 ஆடுகள் மேய்ச்சலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3 வேளையும் பழைய சோறு மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதனை அறிந்த சைல்ட்லைன் அமைப்பின் இயக்குனர் பாத்திமாராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணசுந்தரத்திடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv