மீண்டும் மூழ்கும் சாலை! 2 நாட்களில் ஜப்பான் செய்த சாதனை வீண்!


ஜப்பானில் சமீபத்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய குழியை அந்நாட்டு அரசு இரண்டே நாட்களில் சரி செய்து அனைவரையும் மிரளவைத்தது.

இந்நிலையில், தற்போது சரி செய்யப்பட்ட சாலை மீண்டும் குழியில் மூழ்க தொடங்கியுள்ளது.

அண்மையில் Fukuoka என்ற நகரின் சாலையில் திடீரென மிகப் பெரிய குழி ஏற்பட்டது. சாலையில் 30 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட குழியை, சுமார் 48 மணி நேரத்தில் சரி செய்து உலக மக்களை மிரள வைத்தது ஜப்பான்.

தற்போது, குறித்த சாலை மீண்டும் இரண்டு அங்குலம் குழியாகியுள்ளது. இதனால், மீண்டும் சாலையில் பெரியகுழி ஏற்படுமோ என்ற பயத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு Fukuoka மேயர் Soichiro Takashima மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், முந்தைய குழி மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv