200 கோடி செலவில் பிரம்மாண்ட திருமணம்,,,,


பெங்களூரை சேர்ந்த பிரபல சுரங்க தொழில் அதிபரும், பாஜகவின் முன்னாள் அமைச்சருமான காளி ஜனார்த்தன ரெட்டி தனது மகளின் திருமணத்தை 200 கோடி செலவில் நடத்தவிருக்கிறார்.

காளி ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும் ஹைதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன் ராஜிவ் ரெட்டிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

பண்டைய அரச குடும்பத்தில் திருமணம் நடந்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே தனது மகளின் திருமணத்தையும் அரண்மனை போன்ற இடத்திலேயே அமைக்க ரெட்டித் திட்டமிட்டுள்ளார்.

இதனால், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் 30 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். விருந்தினர்கள் பலர் ஹெலிகொப்டர்களில் வரவிருப்பதால் திருமணம் நடைபெறும் இடத்தின் அருகே 15 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


திருமணம் நடைபெறும் இடத்தில் திருப்பதி கோயில் போன்றும் வெங்கடேஷ்வரரின் சிலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹம்பி நகரத்தில் விருபாக் ஷா கோயிலும் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இதற்காக 38 ஏக்கர் நிலத்தில் செட்டுகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் திருமணமும் மாலையில் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.

திருமணத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த மலர்களைக் கொண்டுதான் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வெங்கடேஷ்வரா சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv