எலும்புக்கூடாய் சடலம்...பெற்ற மகனை இப்படியா கொல்வது: பதறவைத்த சம்பவம்....


அமெரிக்காவில் 11 வயது சிறுவனை அவரது தாயார் 3 ஆண்டுகள் அலமாரிக்குள் பூட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது. யோனாதன் டேனியல் என்ற 11 வயது சிறுவன் கடந்த 3 ஆண்டுகளாக அவரது தாயாரால் அலமாரிக்குள் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாகி தற்போது மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்தே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள இவர்களது வீட்டில் இருந்து திடீரென்று ஒரு நாள் யோனாதன் டேனியல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இது குறித்த விசாரித்த அக்கம்பக்கத்தினரிடம் அவரது தாயார் வெரோனிக்கா மழுப்பல் பதில்களை சாமர்த்தியமாக கூறி வந்துள்ளார். சிறப்பு கல்வி கற்கும் பொருட்டு யோனதான் மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை வந்து செல்ல மட்டுமே முடியும் எனவும் அவர் நம்ப வைத்துள்ளார்.

யோனாதனின் வளர்ப்பு தந்தைக்கு கூட தமது மகனின் இருப்பிடம் குறித்து தகவல் சொல்லப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வெரோனிக்கா தமது கணவரிடம் வந்து, யோனாதன் இறந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள 3 குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

யோனாதன் மெக்சிக்கோவில் படித்து வருவதால் அங்கு சென்று உடலை பெற்று வரவேண்டும் என்று கருதிய அவருக்கு வெரோனிக்கா கூறிய தகவல்களும் காண்பித்த காட்சிகளும் தாங்கிக்கொள்ளும் அளவைவிட அதிகமான வலியை தந்துள்ளது.

அவர் தங்களது படுக்கை அறைக்கு அருகாமையில் இருக்கும் அலமாரியை திறந்து பார்த்தபோது உயிரற்ற, எல்லும் தோலுமாக மக்கிய உருவம் ஒன்று அதன் உள்ளே கிடந்துள்ளது.

அலமாரிக்குள் கண்ட காட்சிகள் அவரை நிலைகுலையச் செய்தது. உடனடியாக அங்கிருந்து விரைந்து வெளியேறிய அந்த நபர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

வெரோனிக்காவின் எஞ்சிய 3 மக்களுக்கும் தங்களது சகோதரன எங்கே அடைபட்டு கிடக்கிறான் என்பது கடந்த 3 ஆண்டுகளாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் உடல் நலம் குன்றியதால் தாயார் அவருக்கு சிறப்பு கவனம் தருவதாக எண்ணி இருந்திருக்கிறார்கள்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக எவரிடமும் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்ற தாயாரின் கட்டளைக்கு பயந்து அவர்கள் 3 பேரும் சொல்லவும் இல்லை.

சமீபத்தில் இவர்கள் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தபோது கூட யோனாதனை அட்டைப்பெட்டிக்குள் மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளதாக வெரோனிக்காவின் 18 வயதாகும் மூத்த மகன் தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv